ஜனாதிபதியின் இணக்கத்தோடு 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி வீட்டுத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, March 27th, 2024

வட மாகாணத்திற்கு, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வளங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க வடக்கு மாகாணத்தில் முன்னர் வளங்கவெள தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம்  வீட்டுத்திட்டத்திற்கு பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக  அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு, அது நிறைவு செய்யப்படாதவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்திற்குள் உள்வாக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீனப்படுத்த இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரை...
மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!

மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ல்அமைச்சர் டக்ளஸ் பிரசன்னத்துடன் வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கானாள அளவீட்டு பணிகள் ஆரம்பம் !
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் - பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிர...