சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!
Monday, September 24th, 2018கொழும்பு பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது தமிழ் மக்கள் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் இனியும் எடுபட்டுப்போய்விடக்கூடாது. யதார்த்தமான சிந்தனைகளுடன் பலமான அரசியல் தலைமைத்து வத்துடன் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று தமிழர் விவாதிகள் கழகத்தின் விவாதிகள் தெரிவித்தனர்.
கொழும்பு பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் தமிழ் மக்கள் இனி யாரை நம்புவது என்ற தலைப்பில் விவாதித்த இளைஞர்களே மேற்கண்டவாறு உரையாற்றினார்கள்.
அந்த விவாதத்தில் இளைஞர்கள் தொடர்ந்த விவாதத்தில் தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டம் தீர்வைப் பெற்றுத்தரும் என்றம் அரசியல் தலைமைகள் தீர்வைப்பெற்றுத்தரும் என்றும், சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தரும் என்றும், நம்பினார்கள் ஆனால் தீர்வு கிடைக்க வில்லை தற்போதய தமிழ் தலைமைகளோ அடுத்த தீர்வு கிடைக்கும் என்று பல தீபாவளிகள் கடந்து சென்றுவிட்டன்.
இன்னொருவரோ மேலே உள்ள மூடியை அது சமஷ்டியா? ஒற்றையாட்சியா? என்று ஆராயாதீர்கள் உள்ளடக்கம் என்னவென்று மட்டும் பாருங்கள் என்று போதிக்கின்றார். இந்த நிலையில் இத்தகையவர்களை தொடர்ந்து தமிழ் மக்கள் நம்பலாமா என்பதே இன்றைய கேள்வியாகும்.
எனவே தமிழ் மக்கள் நம்பிக்கெட்ட இனமாக இன்று நடுத்தெருவில் நிற்கின்ற நிலையில் அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்கும், பொருளாதார எழுச்சிக்கும் இனி தமிழ் மக்கள் யாரை நம்புவது என்பதை சிந்தித்து முடிவு செய்யவேண்டிய அவசியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் என்றும் அந்த இளைஞர்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
Related posts:
|
|