சேவல் கூவிப் பொழுது விடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Friday, March 5th, 2021

சேவல் கூவிப் பொழுது விடிந்ததில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பச்சிளைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லை இன்று (05.03.2021) நாட்டி உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது என்ற என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மீளக்குடியமர்த்தப்படாத பலாலி மற்றும் மயிலிட்டிப் பிரதேச மக்களை சந்தித்த போது, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களினால் இந்தியப் படைகள் திருப்பி அனுப்பப்பட்டமையே தங்களுடைய இன்றைய நிலைக்கு காரணம் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
அண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீ்ர்மானத்தினை தடுத்து நிறுத்தியிருந்தேன்.
ஆனால், குறித்த தீர்மானம் தமது போராட்டத்தினால் நிறுத்தப்பட்டது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த சில தரப்புக்கள் முயற்சிக்கின்றன.

எனவே மக்கள், சேவல் கூவிப் பொழுது விடியாது என்ற யதார்த்ததினை புரிந்து கொண்டு சரியான வழிமுறையை பின்பற்றுவார்களாயின் பொருளாதார ரீதியில் பலமான கௌரவமான எதிர்காலத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts:


உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது - அமைச்சர் தினேஸ் பெருமித...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணி...