சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 – கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் – 2021 எனும் வேலைத் திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கு அமைய, இரசாயண கலப்பற்ற இயற்கை உணவை மக்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குறித்த திட்டத்திற்காக வடக்கு மாகாணத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 500 பயனாளர்கள் நேரடியாக நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் - மாணவர் போராட்ட...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
|
|