செய்வோம்! செய்விப்போம்!! தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் டக்ளஸ் எம்பி உறுதி!

Saturday, October 12th, 2019


ஆட்சிமாற்றம் ஏற்படுமனால் தமிழ் அரசியல் கைதிகளை நான் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதை நான் தேர்தல் கோசமாக கூறவில்லை. எமது மக்களின் ஆழ்மன அபிலாசைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எமது கொள்கை நிலைப்பாட்டை முன்னிறுத்தியே இதைக் கூறுகின்றேன்.கடந்தன் காலங்களில் நாம் செய்தோம். இனிவருங்காலத்திலும் அதை செய்து காட்டுவேம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்டத்தின் கட்சி நிர்வாக செயலாளர்கள் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா வாடி வீடு பொதுமண்டபத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது அவர் மேலும் கூறுகையில் –

தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் களைகட்டியுள்ளது.இதில் நாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராயபக்ச தலையிலான சிறீலங்கா பொதுஜன பொரமுன முன்னிறுத்தியுள்ள ஜனதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளோம்.

கடந்தகலங்களில் நான் மகிந்த அரசில் அமைச்சராக இருந்து அவர்களூடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கிடுத்திருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது பன்னீராயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகள் உறுப்பினர்களை விடுவித்திருந்தேன்.
அத்துடன் இராணுவத்தின் பிடிக்குள் இருந்த பல ஆயிரம் ஏக்கர் காணி நிலங்களை விடுவித்து அது மக்களை மீளவும் கொடுத்திருந்திருக்கின்றோம்.
இதேபோன்று இன்னும் பல செய்யமுடியாத காரியங்களைக்கூட நிறைவேற்றிக் காட்டியிருந்திருக்கின்றோம்.
அந்தவகையில் தான் நான் கூறுகின்றேன். எங்களை நம்புங்கள். நாங்கள் உங்கள் அபிலாசைகளுக்கு தீர்வு கண்டுதருகின்றோம்.

அத்துடன் வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் விசாரணைகள் இன்றி சிறைகளில் இடக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிச்சயம் விடுவித்துக்காட்டுவேன்.இதை நாம் செய்வோம்.செய்விப்போம் என்றார்.

Related posts:


கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் - நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...