சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா காணொளி சாட்சியம்.

Saturday, March 5th, 2016

 

சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக  விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்திய உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமைக்கு அமைவாக டக்ளஸ் தேவானந்தா காணொளி மூலமாக சாட்சியம் வழங்கவுள்ளார்.

இதன்படி S.C.NO.60.1987 என்ற வழக்கு எண்ணிற்கு அமைவாக  சென்னை செசன் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு தொடர்பான விசாரணை வரும் 5ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சாட்சியமளிக்கவுள்ளார்.

1986 ஆம் ஆண்டு சூளைமேட்டில் நடைபெற்ற  சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு நேரில் சென்று சாட்சியமளிக்க முடியாத காரணத்தால் தான் தற்போது சென்னை விசேட செசன் நீதிமன்றத்தில் காணொளி மூலமாக சாட்சியமளிக்க உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய EPRLF மத்திய கமிட்டி அரசியற் குழுவைச் சேர்ந்த  டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் நேரடியான தொடர்புகள் இல்லை என்றபோதும் அன்றைய நுPசுடுகு அமைப்பில் டக்ளஸ் தேவானந்தா இருந்தார் என்ற காரணத்தால் அவரையும் இந்த வழக்கினுள் சம்பந்தப்படுத்தி வழக்கு பதியப்பட்டது. இதற்கு சான்றாக சம்பவம் தொடர்பாக பொலிஸார் பதிந்த முதல் அறிக்கையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற அழிவு யுத்தம் முடிவடைந்த பின்னர்  அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்  அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா டெல்லிக்கு சென்றிருந்தபோது இந்திய அரசினூடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற  வரப்பிரசாதங்களான 50 ஆயிரம் வீட்டுத்திட்டம், வடபகுதிக்கான புகையிரத சேவை, அச்சவேலி கைத்தொழிற்பேட்டை மீளுருவாக்கம், கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனப் புனரமைப்பு மற்றும் தொழிற்துறைசார்ந்த நவீன உபகரணங்கள், வடகடல் நிறுவனத்திற்கான தொழிற்றுறை சார்ந்த நவீன இயந்திரசாதனங்கள்,காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் அமையப்பெறவுள்ள கலாசார மண்டபம், வடமாகாண விவசாயிகளுக்காக 500 உழவு இயந்திரங்கள்,  வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை பொறுக்க முடியாத  சக தமிழ் அரசியல்; கட்சிகளைச் சார்ந்தோர் டக்ளஸ் தேவானந்தாவின் மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக இந்தியாவிலுள்ள தமக்கு சார்பான சட்டத்தரணிகள் ஊடாக இவ்வழக்கை தொடுத்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம்; ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டினடிப்படையில் அவரது சட்டத்தரணிகளது ஆலோசனைக்கு அமைவாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைக்கு அப்போது வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts:

அரசுடனான நல்லுறவைப் பேணி மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என செயல் வடிவில் காட்டியவ...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...

குணசீலனுக்கு படிக்க முடியு மானால் சுகாதாரத்துறை பற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்க ளின் நாடாளுமன்ற உரைக ள...
நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்ஆராய்வு!