சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்நாட்டிலுள்ள கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு, அங்கு வாழுகின்ற துறை சார்ந்த மக்களுடன் கலந்துரையாடி, மேலும்; தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை நிவரத்திப்பதற்கும் நான் திட்டமிட்டுள்ளேன் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தை’ எமது மக்கள் அடையலாம் என எண்ணுகின்றேன்.

அந்த வகையில், எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமைத்துத்தினாலும். எமது பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலினாலும். எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களின் முன் முயற்சியினாலும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பானர் திரு. கஹவத்த, அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், உள்ளிட்ட அதிகாரிகாரிகள் அனைவரதும் பங்களிப்புடனும் இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அட்டை பிடிப்பவர்களால் மீன் பிடிப்பவர்கள் பாதிப்பு - சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத...
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து ப...