சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் – வட்டுக்கோட்டையில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017

சுயலாப அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தில் உங்களது வாழ்வை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வட்டுக்கோட்டை துணவி கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தேர்தல் காலங்களில் சுயலாப அரசியல்வாதிகள் தமது சுயநலன்களை முன் நிறுத்தியதாகவும் தேர்தல் வெற்றியை இலக்காக் கொண்டும் பல்வேறு வாக்குறுதிகளுடன் இங்கு வருவார்கள்.

அவ்வாறு வருபவர்கள் உங்களுக்கு வார்த்ததை ஜாலங்களை வழங்கி மகிழ்வித்தும் குளிர்வித்தும் உணர்ச்சியூட்டுவார்கள். அவற்றில் மயங்கி நீங்கள் வாக்களித்து அவர்கள் வெற்றிபெறும் சந்தர்ப்பங்களில் பின்னர் உங்களை நாடி ஒருபோதும் வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஆனால் நாம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைக்கும் பொருட்டு எப்போதுமே உங்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம். ஆதலால் மக்களுடன் நின்று மக்களுக்கு சேவை புரிபவர்களை நீங்கள் உங்கள் அரசியல் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நீங்கள் எதிர்கொள்கின்ற வாழ்வாதாரம் உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து அதனூடாக வாழ்க்கையிலும் நீங்கள் சார்ந்து வாழும் சமூகத்திலும் பாரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இம்மக்கள் சந்திப்பில் மக்கள் வீடமைப்பு வசதி ,குடிநீர்,வீதிபுனரமைப்பு,கோயில் புனரமைப்பு உள்ளிட்ட தமது தேவைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட செயலாளர் நாயகம் முன்னுரிமை அடிப்படையில் தேவைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு -பாலகிருஸ்ணன் (ஜீவன்)  கட்சியின் வலிகாமம் மேற்கு நிர்வாகச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தார்.

Related posts: