சுயபொருளாதாரத்திற்கு தடையாக இருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே – குமுழமுனை மக்கள் ஆதங்கம்!

IMG-5f07cb73d16ddde03b3a703e67e90206-V Friday, January 12th, 2018

இங்குள்ள குளங்களை சரியான முறையில் புனரமைப்புச் செய்தால் அதனூடாக நாம் எமது பயிர்ச்செய்கை நிலங்களில் பயிரிட்டு அதிகளவான நன்மைகளைப் பெறமுடியும். ஆனால் அதற்கேற்ற நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்காத நிலையிலேயே நாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எமது மாற்றுத் தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று பூநகரி குமுழமுனை மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குமுழமுனைப் பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்  விஜயம் மேற்கொண்டு குறித்தபகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த மண் விவசாயத்துக்கேற்ற நிலமாக இருக்கின்றபோதிலும் சரியான முறையில் இங்கு விவசாயச் செய்கை மேற்கொள்ளமுடியாத அவல நிலை தொடர்கின்றது. அதற்குக் காரணம் இங்கு நீர் நிலைகளை ஆழமாக்கி நீரைத் தேக்கி வைக்கும் ஒரு சரியான படிமுறை இல்லாத நிலை காணப்படுகின்றது.

எனவே எமது நிலங்களில் நாம் பயிர் செய்து தன்னிறைவு காண்பதற்கு புதிய குளங்களை நிர்மாணம் செய்வதற்கும் பழைய குளங்களை புனரமைப்பு செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவேண்டும். அந்தவகையில் இங்குள்ள குளங்களை சரியான முறையில் புனரமைப்புச் செய்து அதனூடாக நாம் எமது பயிர்ச்செய்கை நிலங்களில் பயிரிட்டு அதிகளவான நன்மைகளைப் பெற்று எமது சுயபொருளாதாரத்தை மேம்படுத்தித்தரும் சக்திகொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே என்றும் அதனால் இம்முறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றியடையச் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்களது கோரிக்கைகள் மற்றும் தேவைப்பாடுகளை ஆராய்ந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வீணைச் சின்னத்தை வெற்றிகொள்ளச் செய்வார்களானால் நிச்சயம் குறித்த பிரச்சினைகள் மட்டுமல்ல இப்பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் மேலும் உள்ள பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டுதர நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.


கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்களஸ் தேவ...
உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி  டக்ளஸ் எம்.பிக்கு உண்ட...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...