சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !

Sunday, January 16th, 2022

வடமாராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீச்சு வலையைப் பயன்படுத்தி பாரம்பரியமாக இறால் பிடிக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், அண்மைக்காலமாக ஒரு பகுதியினரால் கூட்டு வலைப் பயன்படுத்தப்படுவதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்படடது.

இதன்போது, மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரபாகரமூர்த்தி, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரன், நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி நிருபராஜ் உட்பட துறைசார் அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்

00

Related posts:

மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
மாசி 10 எமது மக்களது அபிலாஷைகள் நிறைவேறு வதற்கான நாளாக அமையும் - நம்பிக்கை தெரிவிக்கிறார் எம்.பி. டக...
கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோ...
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம்!