சுடர்விடும் சூரியனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Thursday, November 10th, 2016

உதித்தெழுந்தது

ஓர் சுடர் விடு சூரியன்,..

எங்கள் தேச முகட்டை

மூடிய வானின்

கீழ் திசை மீதிருந்து,

இருட்டை கிழித்தொரு

விடியலை படைக்கும்

வெளிச்ச தேவனாய்,….

எங்கள் மொழியாகி

மொழியின் விழியாகி விழித்திருந்து,….

எங்கள் நிலமாகி

நிலத்தின் பலமாகி

நிலைத்திருந்து,…

விடுதலைப்பயிர்களின்

வேர்களுக்கு உரமாக

குருதிக்கொடை தந்து,…

ஒரு சுதந்திர போராட்ட

இயக்கத்தையே

உருவாக்கி நின்று,…

களத்து மேட்டில்

கந்தகப்புகை விழுங்கிய

தளபதி அன்று…

சுதந்திர சூடேறிய சூரியன்

எங்கள் வான் முகட்டின்

மேடேறி மிதக்கிறது

இன்று,…

பாதை மாறியும்

பயணம் ஒருபோதும்

மாறது…..

சுடர் விடும்

எங்கள் சூரியனே!…

இடர்களில் நடுவே

நீ எழுந்து வந்து

தொடர் நடை போடு!…

நீ சூரியன் மட்டுமல்ல.

எங்கள் சந்திரனும் நீதான்…

உன் பாதங்கள் நடக்கும்

திசை தோறும் மட்டுமே

மக்களின் முகங்கள்

தாமரை பூப்பூக்கின்றன…

உன் தோளில்

மாலை விழுந்தாலும்

அதில் பூக்கள் கழன்று

உன் காலில் விழும்!

ஏன்?…

உன் தோளில் இருக்க

பூக்களுக்கு

சம்மதமில்லை!

நீ நடந்த வந்த

பாதையெங்கும்

முட்களே அதிகம்!

உன் பாதங்களுக்கு

ஒத்தடம் கொடுக்கவே

பூக்கள் ஆசைப்படுகின்றன!….

பிறந்த நாள்

வாழ்த்துப்பூக்கள்!…

-சூரிய புத்திரன்.

15008067_1222450997793985_26958996_o


பொருளாதார மத்திய நிலைய இழுபறி கூட்டமைப்பின் மெத்தனப் போக்கை காட்டுகின்றது!
தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் - நாடாளுமன...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...
விசாரணைகளை முன்னெடுக்க பதவிகள் தடையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!