சுகாதார தொண்டர் விவகாரம் – சேவைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, July 7th, 2024


……..
வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாகா நீண்டகால சேவை சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில்   வைத்தியசாலையால் உறுதிப்படுத்தப்படும்  சுகாதார தொண்டர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வளங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவுன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் தமது தொழிலில்  நிரந்தர நியமனம்  இன்றிப் பல வருடங்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் நிரந்தர நியமனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த சுகாதார தொண்டர்கள் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதர ஈட்டலுக்கான தொழிலாக குறித்த தொழிலை நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பல துன்பங்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவும், நீண்டகாலமாக  இவ்வாறு பணியாற்றி வந்தாலு. இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்காமையால் தமது வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி நிரந்தர நியமனத்தை
விரைவுபடுத்தி தருமாறு  அமைச்சரிடம் கோரிக்கை முன்வைது வந்திருந்தனர்.

நீண்டகால பிரச்சினையாக இருந்துவந்த சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை கருத்திற்கொண்ட அமைச்சர் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் அதற்கான ஏதுநிலைகள் கூடிவரும் நிலையிலேயே  அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை - அமைச்சர்களான டக்ளஸ் - ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் - ...

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வ...
தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!