சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் 454 பேரினது நியமனங்கள் தொடர்பில் நான் பல தடவைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் அனுமதி அளித்து வடக்கு மாகாண சபைக்கு கொடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இருப்பினும் வடக்கு மாகாணத்தில் பல வருட காலமாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எவ்விதமான கொடுப்பனவுகளையும் பெறாமல் 820 சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
இதனை கௌரவ சுகாதார அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொண்டு ஏனைய அனைவரையும் நிரந்தரப் பணிக்கு உள்ளீர்க்கக்கூடிய வகையில் ஒரு விஷேட ஏற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் 2015ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழான கட்டளை கணக்காய்வாளர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|