சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 21st, 2016

எமது எதிர்கால இளம் சிறார்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதே எமது இலக்காகும். அத்தகைய ஒரு தூரநோக்குடைய இலக்குடன்தான் எமது இனத்தின் கல்வி வளர்ச்சிக்காக நாம் அயராது உழைத்துவருவதுடன் அதில் வெற்றியும் கண்டிருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான முருகேசு வசீகரன் அவர்களது பங்களிப்புடன் இன்றையதினம் நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

கடந்தகாலத்தில் எமது இளம் சந்ததியினர் பல்வேறுபட்ட துன்ப துயரங்களை  கொடிய யுத்தத்தின் காரணமாக சந்தித்துவந்தபோதும் எமது பகுதி மாணவர்களின் கல்வி வீழ்ச்சி கண்டிருக்கவில்லை. தற்போது நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதுடன் ஆற்றலில்லாதவர்கள் கைகளில் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றதனால் எமது மாணவர்கள் பல்வேறுபட்ட சமுக பிறழ்வுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

DSCF0222

இத்தகைய சவால்களை களைந்தெறிந்து எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை வளப்படுத்துவதற்காக கடந்த காலத்தில் நாம் எமக்கு கிடைத்திருந்த சிறிய அரசியல் அதிகாரங்களைக்கொண்டு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளதுடன் அவற்றில் வெற்றியும் கண்டுள்ளோம். தொடர்ந்தும்  நாம் எடுத்தவரும் முயற்சிகளுக்கு மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரதும் பங்களிப்பு அவசியமாகும். மேலும் அதிகரித்த பலம் எமக்கு கிடைக்குமாயின் உங்கள் ஒவ்வொருவரது கல்வி மட்டுமல்ல அனைத்து தேவைகளும் தீர்க்கப்பட்டு ஒரு அமைதியான தேசத்தை கட்டியெழுப்பி சுபிட்சமான வாழ்வியலை உருவாக்கித்தர நாம் என்றும் உங்களுடன் இருப்போம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

DSCF0224

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

DSCF0225

DSCF0226

DSCF0231

Related posts:


விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தை...
தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!