சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 1st, 2018

சரியான ஒரு அரசியல் தலைமை இணங்காணப்பட்டு சிறந்த ஒரு அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் தற்போது தமிழ் பிரதேசங்களில் அதிகரித்துள்ள சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு எட்டப்பட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்றையதினம் வடக்கு – கிழக்கு சமூக ஜனநாயக அமைப்பின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவலர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது வடக்கில் மட்டுமல்லாது தமிழர் வாழும் பிரதேசம் எங்கும் அதிகரித்தவரும் சமூகப் பிறழ்வுகளுக்கு தமிழ் மக்களிடையே ஒரு உறுதி மிக்க அரசியல் தலைமை இன்மையே பிரதான காரணமாகின்றது.

சட்டத்தினூடாக சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்த ஒருபக்கம் நடவடிக்கைகள் நடைபெற்றாலும் மறுபக்கம் அது தொடர்பான விழிப்புணர்வுகள் மக்களிடம் எடுத்தச்செல்லப்படுதலும் அவசியமாகின்றது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது அமைப்புக்கள் மட்டுமல்லாது அரசியல் தரப்பினரும் தமது முழுமையான பங்களிப்பை பேதங்களற்று வழங்க முன்வரவேண்டும்.ஆனால் எமது பிரதேசங்களில் அவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படுவது குறைவாகவே உள்ளது.

எதை எடுத்தாலும் அதை அரசியலாக்கி தமது சுயலாபங்களுக்காக பயன்படுத்தும் அரசியல் தரப்பினரது கீழ்த்தரமான செயற்பாடுகளே எமது சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளமைக்கு காரணமாகின்றது. அந்தவகையில் பேதங்களற்று ஒற்றுமையுடன் அனைத்த தரப்பினரும் பயணித்தால் மட்டுமே எமது எதிர்கால சந்ததியினரை ஒரு உறுதிமிக்க நிம்மதியான அமைதிச் சூழலிற்கு இட்டுச்செல்ல முடியும்.

அத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவே நாம் அயராது பாடுபட்டுவருகின்றோம். ஆனாலும் எமக்கான அரசியல் பலம் அதை செய்து முடிப்பதற்கு போதுமானதாக இல்லாதிருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் வரவுள்ள சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி தமது அரசியல் பலத்தை எம்மிடம் வழங்கும் பட்சத்தில் இன்று தமிழ் மக்கள் மத்தியில் புரையோடிக்கிடக்கும் சமூக சீரழிவுகளை இல்லாதொழிப்பது மட்டுமல்லாது எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு எமது மக்களை இட்டுச்செல்ல முடியும். அத்தகைய வழிநடத்தலை செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

IMG_20180701_093708

Related posts:

வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்த...
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...