சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்ஆராய்வு!
Sunday, November 25th, 2018சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளையும் குடியிருப்பு காணிகளுக்கான நிரந்தர உரிமங்களையும் பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணி குடியேற்றக் கிராமத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்துகொண்டதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே குறித்த குடியிருப்பு பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –
அண்மையில் இப்பகுதியில் 67 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்த நிலையில் குடியமர்த்தப்பட்ட காணிகளுக்கான நிரந்த உரிமங்கள் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என்றும் தமது வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைப்பாடுகளையும் இதுவரை பூரணப்படுத்தி தரவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது தமது குடியிருப்பு பகுதியை கடல் நீர் அடிக்கடி உட்புகுந்து அச்சுறுத்துவதால் அதனை தடுப்பதற்கான ஒரு அணையை அமைத்து தருமாறும் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்ததுடன் கடற்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் தமது குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் அதனை கட்டப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவிரைவில் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை துறைசார் தரப்பினருடன் கதைத்து தீர்வுகண்டு தருவதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|