சாவகச்சேரி சந்தை வியாபாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018

சாவகச்சேரி சந்தை கடைத்தொகுதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒரு தொகுதி வர்த்தகர்களைச் சந்தித்து அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இன்று காலை குறித்த பகுதிக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் மரக்கறிச் சந்தைப் பகுதிக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு சந்தைக்கு வருகை தந்த மக்களுடனும் கலந்துரையாடினார்.

இதனிடையே சந்தை வளாகத்தில் பித்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர் நீங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் மட்டுமன்றி உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கும் சாவகச்சேரி நகரசபையை நாம் வெற்றெடுக்கும் பட்சத்தில் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts:

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் ட...
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...