சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் !

Friday, November 27th, 2020

நாட்டில் குறைவேற்பட்டுள்ள மீனினங்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில் குஞ்சுகளை வைப்பிலிடல், மீன் இனங்களையம், அவற்றின் தொகைகளையும் இனங்காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல், அறுவடைகள் மேற்கொள்ளப்படாத மீனினங்களை அறுவடை செய்தல், மீன் இனங்களையும், அவற்றின் தொகையினையும் அறிந்து கொள்வதற்கான கருவிகள் மற்றும் தொழில் நுட்பத்தை வழங்குதல், தூண்டில் இறைக்கான மீனினங்களை இறக்குமதி செய்வதைவிடுத்து, தேசிய ரீதியில் அவற்றை பிடிக்கின்ற, பேற்றுக்கொள்ள கூடிய செயற்பாடுகளை பரவலாக்குதல் போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கென தேசிய நிறுவனங்களை அதில் ஈடுபடுத்தும் ஏற்பாடுகளுடன், நீள் கடற்றொழில் முறைமைக்கு மேலதிகமாக கைத்தடி தூண்டில் வரிசை முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், மீனினங்களை பெருக்கும் வகையில் பயன்பாட்டுக்கு உதவாத பேருந்துகள்,; ரயில் பேட்டிகள், ரயில் எஞ்சின்கள மற்றும் பழுதடைந்த படகுகள்  போன்றவற்றை கடலில் வைப்பிலிடும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், அனைத்து பல நாட்களங்களுக்கென  அவதானிப்பு தொழில் நுட்பக் கருவிகளை VMS – Vessel Monitoring System) பொருத்துவதற்கும், ரேடியோ கருவிகளை வழங்குவதற்கும் தற்போது உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் கடல் நீரை குளிரூட்டி அறுவடைக்குப் பின்னரான கடலுணவுகளை பல நாட் படகுகளில் பாதுகாப்புடன் வைத்து, கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

Related posts:

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா ...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...

தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...