சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, November 8th, 2019

சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் உங்களது எதிர்காலத்தை வெல்வீர்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் வங்காலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களது ஆதரவுப்பலம் எனது கரங்களுக்கு கிடைக்கப்பெற்றால் மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் தொழில்துறை உள்ளிட்ட அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகண்டுதருவேன்

நாம் கூறும் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் தெய்வ வாக்கு போன்றவை. அதுபோல நாம் மக்களை நேர்வழியில் வழிநடத்திச் செல்கின்றோம். கடந்த காலத்தில் நாம் வடக்கில் செய்த சேவைகள் ஏராளம். ஆனாலும் இப்பகுதியில் எமது கட்சியின் அசியல் பலம் மிகக் குறைவாக இருந்தமையால் நாம் எமது மக்கள் பணிகளை முழுமையாக செய்யமுடிக்க இயலாது போனது.

நாம் இம்முறை ஆட்சி அதிகாரங்களுக்கு வந்தவுடன் இவ்வாறான அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வுகண்டுதருவேன்
அதுமட்டுமல்லாது தொழில் வாய்ப்பில் இயல்பான சூழ்நிலையையும் உருவாக்கி தருவேன் . என்னை நமுங்கள். நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts: