சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில்  உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, August 5th, 2016

கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு அண்மையான வளாகத்தில் இறங்குதுறை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் நிலைமைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டார்.

கீரிமலைக்கு இன்றைய தினம் (05) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்குச் சென்று நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

முன்னதாக குறித்த இறங்குதுறை அமைக்கப்படுவது தொடர்பில் அப்பகுதி கடற்படை அதிகாரியுடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டதுடன் அப்பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் முக்கிய இறங்குதுறையாக மயிலிட்டி இறங்குதுறை பன்னெடுங்காலமாக இருந்துவந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக குறித்த இறங்குதுறையை கடற்படையினர் வசம் தற்போதும் உள்ளது.

DSCF1694

இந்நிலையில் மயிலிட்டி இறங்குதுறையை தமது பயன்பாட்டிற்குப் பெற்றுத்தந்து தமது கடற்றொழிலுக்கான ஏதுநிலைகளை உருவாக்கித் தருமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கைகள் விடுத்திருந்த போதிலும் இதுவரையில் அது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.

மயிலிட்டி இறங்குதுறைக்கு மாற்றீடாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தை அண்மையான ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவிலுக்கு அண்மையில் புதிதாக இறங்குதுறையை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கடற்றொழிலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

DSCF1702

இந்நிலையிலேயே குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் இறங்குதுறை அமைப்பது தொடர்பில் ஆலய பூசகர்கள் மற்றும் பக்தர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்த அதேவேளை கடற்றொழிலாளர்களுக்கு மயிலிட்டி இறங்குதுறையைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

DSCF1729

இதனிடையே, யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் தற்போது புனரமைக்கப்பட்டுவரும் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவிலின் புனரமைப்புப் பணிகளையும் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இதன்போது கட்சியின் வலி.கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

DSCF1739

Related posts:


நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆல...
ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது - அவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் உடனடியாக அகற்ற...