சரியான தீர்மானங்களை மக்கள் எடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 17th, 2017

தொடர்ந்தும் கடந்தகால அரசியலையும் தமிழ் தலைமைகளையும் குறை கூறிக் கொண்டிருக்காது மக்கள் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து செயற்பட்டிருந்தால் பிரச்சினைக்கான தீர்வை பெற்றிருக்கலாம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார்

பலாலி வடக்கு, அன்ரனிபுரம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியில் வாழும்  மக்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பல தாசாப்தங்கள் கடந்தும் எமது மக்கள் மத்தியில் தீர்க்கப்படாது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மக்களும் சரியான தெளிவைப்பெற வேண்டும் அத்துடன் நிரந்தரமான தீர்வுகளை காண்பதற்கு தமிழ் மக்கள் என்ன வகிபங்கு செய்ய முடியும் என்பது தொடர்பாகவும் அனைவரும் தெளிவுறவேண்டும்.

3

வெறுமனே கடந்தகால தமிழ் தலைமைகளையும் அவர்கள் விட்ட பிழைகளையும் கூறிக்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் பிரச்சனைகளை விட்டுச் செல்லாது எமது காலத்திலேயே எமது மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

01

அத்தகைய ஒரு தூர நோக்குடன்தான் நாம் மக்களுக்காக ஜனநாயக நீதியில் எமக்கு மக்களால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

02

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச்  செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்பு, கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாக செயலாளர் வலண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

4

Related posts:

மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்  - மனையாவெளியில் டக்...
கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன...
அரசுடனான கூட்டமைப்பின் உறவு அரசியல் கபடத்தனமாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம் !