சம்மந்தனின் ஆருடம் மீண்டும் பொய்த்துவிட்டது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, February 6th, 2019

இவ்வருடம் சுதந்திர தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் இறுதியாக தெரிவித்திருந்தார். 71ஆவது சுதந்திர தினமும் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சம்மந்தன் எதைக் கூறப்போகின்றார்? என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்தச் செய்தியில், 2016ஆம் ஆண்டு பொங்கலுக்குள் தீர்வு கிடைக்கும் என்றார் பின்னர் அதே வருடம் தீபாவளிக்குத் தீர்வு கிடைக்கும் என்று கூறினார். 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார், பிறகு அதே ஆண்டு உழைப்பாளர் தினத்திற்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

அதன் பின்னர் 2018ஆம் ஆண்டும்  தீபாவளிக்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என்று கூறினார். இறுதியாக 2019ஆம் ஆண்டு சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பண்டிகைகளுக்குப் பண்டிகை தீர்வு வரும், தீர்வு வரும் என்று காலத்தை வீணடித்துக்கொண்டு, புதிய அரசியலமைப்பை வரைவதிலும், அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதிலும் அரசுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக தீர்வுக்குத் தடையாகவே செயற்படுகின்றனர்.

2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தில் முன்வைத்த மிக அற்புதமான வரைவுத் திட்டத்தை அப்போதைய எதிர்க்;கட்சியுடன் இணைந்து எதிர்த்தும், எரித்தும் தடுத்து நிறுத்தினார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு நிலையான அரசியல் தீர்வொன்று கிடைத்துவிடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அப்போது எதிர்த்து எரித்துத் தடுத்தும், இப்போது ஆதரித்து தடுத்தும் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:


நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட...
ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - ...
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந...