சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 30th, 2017

ஒவ்வொரு சமூகத்தையும் நல்வழிப்படுத்டுதுவதில் அப்பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்களதும் விளையாட்டுக் கழகங்களினதும் பங்கு இன்றியமையாததொன்றாகும். அதனை உணர்த்தியுள்ள இந்த மனோகரா சனசமூக நிலையம் எதிர்காலங்களிலும் இளைய சமூகத்தினரை நல்வழிப்படுத்தும் கழமாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அல்லாய் மனோகரா சனசமூக நிலையத்தின் 90 ஆவது நிறைவுதின இறுதி நிகழ்வுகளிலும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்திலும் பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒரு சமூகம் வளர்ச்சியும் உயர்ச்சியும் காணவேண்டுமாயின் கல்வித்துறையூடாக மட்டும் சாதித்துவிட முடியாது. அதற்கு விளையாட்டுத்துறையும் பக்கபலமாக இருக்க வேண்டும். அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் மட்டுமல்லாது பெரியவர்களையும் இந்த நிகழ்வு ஒன்றிணைத்து இக்கிராமத்தின் ஒற்றுமையை எடுத்தியம்பியுள்ளது.

சமூகப்பணி என்பது வயது, பால் வேறுபாடின்றி சமூக முன்னேற்றத்திற்காகவும் உயர்ச்சிக்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன். அடிப்படையிலேயே கல்வித்துறை மட்டுமல்லாது விளையாட்டுத் துறையையும் ஒருங்கே இணைத்ததாக பாடாசாலைகளில் மட்டுமன்றி சமூகங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் விழாக்களிலும் விளையாட்டுத்துறையின் முக்கியத்துவத்தையும் தேவைகளையும் உணர்ந்துகொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செய்ற்பட வேண்டும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் நிச்சயம் சமூகத்தில்  நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா இங்கு சுட்டிக்காட்டினார்.

அல்லாய் சனசமூக நிலைய தலைவர் ஜெயதர்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் மக்கிய நிகழ்வாக நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டியில் மோதிய மனோ ஸ்பைடர் அணி தன்னை எதிர்த்து மோதிய மனோ வார்றியர்ஸ் அணியை சமநிலை தடுப்ப அதையின் மூலம் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: