சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை ‘மக்கள் செல்வம்’ என்று அழைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

சமுர்த்தி உதவித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த கருத்துக்கு அமைவாக அதன் பெயரை ‘ஜன ,சுறு’ என மாற்றுவதாயின் அதற்கான தமிழ் பதமான ‘மக்கள் செல்வம்’ என்ற பதத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்..
அவர் மேலும் தெரிவிக்கையில் –
சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளை அதிகரிக்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று தங்களது வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்துள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு அதி விஷேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|