சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் – வேலையற்ற பட்டதாரிகள்!

Monday, February 5th, 2018

சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் என வேலையற்ற பட்டதாரிகள்  கட்சியின் செயலாளர் நபயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலவலகத்தில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்தரையாடியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

வறுமைப்பட்ட மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது நீங்கள் தான் என்பதை நாம் அறிகின்றோம் தமிழ்த்தேசியத்தை நம்பி கடந்த காலங்களில் ஏமாற்றத்தில் தான் வாழுகின்றோம்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை தவிர  ஏனைய தமிழ்க்  கட்சிகளை நம்பத் தயாராக இல்லை என்றும் பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்

2013ம் அண்டு வடக்கு மாகாணசபையை தமிழ்த தேசியக் கூட்டமைப்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் இவற்றில் எமது மக்களுக்காக எதனைச் சாதித்திருக்கின்றார்கள். வெறும் 300க்கு மேற்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியுள்ளார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை. இடர் படும் துயர் படும் எமது மக்களுக்க இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளோம்

இது சாதாரணமாக நாம் செய்யவில்லை அதற்காக எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்தே செயற்படுத்தி இருந்தோம்.

எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை கைப்பற்றி எதனைச் சாதித்துள்ளார்கள் வைக்கோல் பட்டையை நாயாக இருற்து செயற்படும் வடக்கு மாகாண சபையில் ஒருபோதும் தாமும் செய்ய மாட்டார்கள் இனிமேல் செய்யவும் வாய்ப்பில்லை என்றும் குறித்த  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருப்பதாவும் சுட்டிக்காட்டினார்

IMG_20180205_084125

Related posts: