சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Saturday, March 6th, 2021

சமுர்த்திப் பயனாளர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, எமது செயற்பாடுகள் பரிகாரங்களை பெற்றுக் கொள்வதாக அமைய வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கங் கொண்டவையாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

சமுரத்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்காயா வாரத்தினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கடந்த காலத் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டமையினாலேயே தமிழ்  மக்களுக்கு இந்தளவு இழப்பு ஏற்பட்டது என்பதை வரலாற்றுச் சம்பவங்களின் ஊடாகச் சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்திலாவது கிடைக்கின்ற சந்தர்ப்பங்ளை மக்கள் தவறவிடக்கூடாது என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

அந்தவகையில், கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சமுர்த்தி    திட்டத்தை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு வந்திருந்தமையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற அனைத்து திட்டங்களையும் பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கிய வாரத்தின் ஊடாக சௌபாக்கியா வீட்டுத் திட்டம், அருணுலு கடன் திட்டம், அலோகா கடன் திட்டம் போன்றவற்றின் ஊடாக சமுர்த்தி பயனாளர்களுக்கு கௌரவமான வாழ்கையை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: