சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்கள் ஆலோசனை சொல்வது வேதனையளிக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 15th, 2018

கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதானது வேதனையளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் சாவகச்சேரி நகரசபை பகுதி பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களது நலன்சார்ந்தும் அவர்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி தொடர்பிலும் ஆலோசனை சொல்லும் அருகதை எமக்கு மட்டுமே உண்டு. அந்த வகையிலேயே மக்களது தேவைப்பாடுகளையும் அவர்களது உரிமைகள் தொடர்பிலும் அதிகளவான அக்கறையுடன் எமது செயற்பாடுகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டியும் இருக்கின்றோம்.

அந்தவகையில் இப்பகுதி மக்களது தேவைப்பாடுகளை கடந்த காலங்களில் முடியுமானவரையில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

இம்முறையும் இப்பகுதி மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப்பலத்தை தராதபோதிலும் கிடைக்கப்பெற்றுள்ள குறைந்தளவு பலத்தைக்கொண்டு இப்பகுதியில் காணப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம் என்றார்.

Related posts: