சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் – ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதனூடாக உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் உருவாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மங்குளம் ஒலுமடு பிரதேச மக்களின் குறைகேள் சந்திப்பு ஒலுமடு சூலவைரவர் ஆலய அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்-

நாம் மக்களுக்காக பல வகையான தேவைப்பாடுககுக்கு தீர்வு கண்டு கொடுத்ததுடன் அவர்கள் எதிர்கிள்ளும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளுட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமல்லாது நாம் எமது மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உழைத்தும் வருகின்றோம்.

நாம் மக்களை உசுப்பேற்றும் அரசியலை ஒருபோதும் முன்னெடுத்தது கிடையாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களுக்கான சுய நலன்களுக்காக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அதனால் தான் நாம் உங்களிடம் கூறிவருகின்றோம் எங்களை நம்புங்கள். நாம் செய்வோம் செய்விப்போம் என்று.
ஆட்சியில் நாம் இருந்திருந்தால் உங்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் உடனடியாகவே தீர்க்கப்பட்டிருக்கும். கடந்த காலங்களில் அதை நான் செய்தும் காட்டியிருக்கின்றோம்.

இன்று எமது இளம் சந்ததியினர் தொழில் வாய்ப்பின்றி வறுமையில் உள்ளனர்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் நாம் கோருகின்றோம் நாம் கூறும் வழிமுறைகளை நோக்கி அணிதிரண்டு வாருங்கள் என்று.

இம்முறை உங்கள் வாழ்வியல்லில் மாற்றங்கள் உருவாதற்கான வாய்ப்புக்கள் வந்துள்ளது. இதை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாம் வாக்கு கேட்பது மக்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. நீங்கள் உங்கள் ஆதரவு பலத்தை இம்முறை மகிந்த ராஜபக்ச அவர்கள் தாமரை மொட்டு சின்னத்தில் முன்னிறுத்திவுள்ள வேட்பாளர் கோட்டபய ராஜபக்‌ஷ அவர்களுக்கு வழங்கி அவரது வெற்றியை உறுதி செய்து எங்களது கரங்களை பலப்படுத்துவீர்களானால் அடுத்த ஒருசில வருடங்களுக்குள் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் நிச்சயம் செய்து தருவோம் என்றார்.

Related posts: