சதிகளாலும் பொய்களாலும் ஈ.பி.டி.பியை தோற்கடிக்க முடியாது!

Sunday, December 31st, 2017

ஈ.பி.டி.பியின் பெயரில் மிரட்டல் விடுத்த சதிகாரரின் செயல் அம்பலமாகியுள்ளது.. விழிப்போடு இருந்து உண்மையை வெளிக்கொண்டுவந்த  வேட்பாளர் உதயசிறிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பாராட்டுகிறது.

ஈ.பி.டி.பியின் பெயரால் ஏதெனும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அநாமதேய அழைப்புகள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவேண்டும் என்பதை நாம் மீண்டும் ஒருதடவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கான வெற்றியை மக்கள் உறுதி செய்துள்ள நிலையில்  அந்த வெற்றியை தடுக்கும் நோக்கத்தோடு சிலர் செயற்படுகின்றனர் என்பதை வேட்பாளர் உதயசிறிக்கான அநாமதேய அச்சுறுத்தல் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

எனவே இவ்விதமான சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதனூடாக குறித்த செயலை மேற்கொள்ளும் குற்றவாளிகளை மக்கள் முன் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடியும்

கடந்தகாலங்களிலும் திட்டமிட்டவகையில் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி  எம்மீது சேறுபூசல்களை  சிலர் மேற்கொண்டுவந்திருந்தனர். ஆனாலும் அவையாவும் பின்னர் சட்டத்தின் மூலம் உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இதனிடையே ஈ.பி.டி.பி தவிர்ந்த இதர அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் பதவிப் போட்டிகளும் ஆசனப் பங்கீட்டுக் குத்துவெட்டுக்களும் நிறைந்து காணப்படும் நிலையில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சியாக ஈ.பி.டி.பியை மக்கள் இனங்கண்டு அதன் வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களால் எமது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுடன் தமிழ் மக்கள் இன்று நன்கு விழிப்படைந்துள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி.

Related posts: