சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்கம் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Thursday, March 2nd, 2023

சட்ட விரோத  செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது.

இவற்றை கட்டப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும்  அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த தொண்டர் அணி செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ் மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்று இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு முன்னாயத்த கூட்டத்தில் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

போதைப் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதற்காக நீதியமைச்சரோடு பேசி சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த கூட்டத்தில் தான் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனடிப்படையில் போதைப்பொருள்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குற்றங்கள்  போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் பொலிசாருக்கு தான் பணித்திருந்ததாகவும் கூறியதுடன் இந்த செயற்பாட பேச்சளவில் இருந்துவிடாத செயல்முறைவடிவில் கொண்டுவர தான் மாதாந்தம் அது தொடர்பான பெறுபேற்று அறிக்கையை குறித்த தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: