சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன – மட்டக்களப்பு நாவலடி கடற்றொழிலாளர் அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

மட்டக்களப்பு நாவலடி கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்றையதினம் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு வாவி மற்றும் ஆழ் கடல் பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மட்டக்களப்பு வாவிப் பகுதியில் சட்ட விரோதச் செயற்பாடுகளினால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன் இதன் காரணமாக வாவியை நம்பி வாழுகின்ற சுமார் 11 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அமைச்சரிடம் மட்டக்களப்பு நாவலடி கிராமிய கடற்றொழிலாளர் முறையிட்டுள்ளனர். இதனிடையே மன்னார், வங்காலை ஆழ் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள களங்கண்டிகளினால், ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற கடற்றொலிலாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ள வங்காலை கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சரிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|