சட்டவிரோத மீன்பிடிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, May 7th, 2020

வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பபட்டுவந்த கடற்றொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான பணிப்புரையை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் சட்டவிரோதமான கடற்றொழிலை மேற்கொள்ள எவருக்கும் இடமளிக்கவும் மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளர்.

தமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்றொலை தடுத்து தமது இயல்பான கடற்றொழிலை மேற்கொள்ள வழிவகை செய்து தருமாறு வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர் சம்மேளனங்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களது நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த சுருக்குவலை, “ஸ்கூபா டைவிங்”, “பர்சின்”வலை மீன்பிடி மற்றும் வெடி வைத்து மீன்பிடிக்கும் முறை, வின்ச் பயன்படுத்தி செய்யப்படும் மத்தல் மீன்பிடி, சதுப்புநில மரங்களை வெட்டி அதை வைத்து மீன்பிடி நடவடிக்கை, மோனோபில மேன்ட் வலை மீன்பிடி வெளிச்சம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடித்தல் உள்ளிட்ட சில சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்

அத்துடன் அப்பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் அனைத்து படகுகளுக்கும் அவற்றின் இலக்கமும், மீன்பிடி அனுமதி என்பன அப்பகுதிகளின் துறைசார் காரியாலத்தில் பதிவுகள் இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் பணித்துள்ளார்.

Related posts: