சட்டங்கள் அமுலாக்கத்தையும் அக்கறையோடு செய்யுங்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

மன்னார் தென் கடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அகலச் சிறகு வலை எனப்படுகின்ற – அடியில் இரும்புக் கம்பிகள் பொருத்திய சுமார் 300க்கு மேற்பட்ட பொறிகள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடற் தொழிலில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என 1966ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டிருப்பினும், இப்பகுதியிலுள்ள சில கடற்றொழிலாளர்கள் பல வருடங்களாக ஒரு மீற்றர் நீளமான இரும்புக் கம்பிகளை வலைகளுடன் இணைத்துப் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தாழ்வுபாடு, வங்காலை, நறுவிலிக்குளம், அரிப்பு, அச்சங்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான சிற்றளவு படுப்பு வலை மற்றும், கரை வலை கடற்றொழிலாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கிடையில் முரண்பாடுகளும், அடிதடி மோதல்களும் அதிகரித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
அத்துடன் கொழும்பில் கடற்றொழில் அமைச்சின் மூலமாக விடுக்கப்படுகின்ற தொழில்சார் விதிமுறைகள் மற்றும் தடைச் சட்டங்கள் என்பன வடக்கில் அதிகமாக அமுல்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலளாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (23) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|