சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது!
Saturday, March 7th, 2020சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
இன்றையதினம் பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்ட குறித்த மைதானத்திற்கு சென்றிருந்த அமைச்சர் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்துவைத்தபின் உரையாற்றுகையில் –
இலங்கையின் வட முனையின் கடற் கரையோரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் செப்பனிடல் தொடர்பில் இன்னமும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.அவற்றை நீங்கள் என்னிடம் கோரிக்கையாகவும் முன்வைத்துள்ளீர்கள்.
குறிப்பாக மைதானத்தை செப்பனிடல், விளையாட்டு வீரர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஜிம் உபகரணங்கள் இரவு நேரங்களில் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்கம்பங்கள், மைதானத்தை சுற்றி வலை அமைத்தல் போன்ற பல தேவைப்பாடுகளுக்கு காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர் வரவுள்ள சந்தர்ப்பத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துவீர்களானால் உங்கள் அனைத்து தேவைகளும் தீர்வுகாணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|