கௌதாரிமுனை இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Wednesday, July 14th, 2021

பூநகரி, கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை பார்வையிடுவதற்கான விஜயத்தனை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

குறித்த பகுதிக்கு இன்று காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பாக துறைசார் தரப்பினருடனும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக கிளிநொச்சி, புதுமுறிப்பு  பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 30 மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டிகளை புனரமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், முதற் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட 10 தொட்டிகள் உத்தியோகபூர்வமாக சமூக அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து குறித்த தொட்டிகளை சமூக அமைப்புக்களிடம் கையளித்தார்.

எஞ்சிய தொட்டிகளையும சமூக அமைப்புக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்துமாறு கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை அக்கராயன் மற்றும் புதுமுறிப்பு ஆகிய கிராமிய  நன்னீர் மீன்பிடி அமைப்புக்களுக்கான மீன்பிடி வள்ளங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத...
முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் த...