கோண்டாவில் ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் ஆலய தேர் திருவிழா சிறப்பு பூசை வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

கோண்டாவில் திருவருள்மிகு ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் ஆலய தேர் திருவிழா சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இன்றையதினம் குறித்த ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போத்து மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு ஆசி வேண்டி நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.
இதனிடையே காலை 8.30 மணியளவில் வசந்தமண்டப பூசை வழ்பாடுகளுடன் எழுந்தருளிய ஸ்ரீசந்திரசேகர விநாயகர் 8 மணியளவில் தேரில் ஏறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related posts:
அதிகாரிகள், அவலத்திலுள்ள மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் பணியாற்றவேண்டும்!
வளம் மிக்க முல்லை மண்ணை கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் நகர்வுகள் ஆரம்பம்!
|
|