கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, November 25th, 2018

கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளர்.

இன்றையதினம் குறித்த ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போத்து மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

ஆலய தரிசனங்களின் பின்னர் ஆலய பக்கதர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இந்தியாவிலுள்ள சபரீசர் ஆலயத்திற்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் யாழ்பாபணத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலத்திற்காக தென்னிலங்கையிலிருந்த யானை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கட்டம் கட்டாக இந்தியா சென்று ஆலய தரிசனத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளையும் யானை ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

110

10

12

13

14

Related posts:


அரசுடனான கூட்டமைப்பின் உறவு அரசியல் கபடத்தனமாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம் !
சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குப...