கோட்டபய வெற்றிபெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் – டக்ளஸ் எம்.பி.உறுதி!

Monday, October 21st, 2019

வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவு கொடுக்கும் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்றால் இதுவரை விடுவிக்கப்படாது சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை நிச்சயம் நாம் உறுதி செய்வோம்.

இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல. இது எமது ஆழ்மன விருப்பம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் வட்டார நிர்வாக செயலாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றூகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் இலாபங்களுக்காக இதுவரை விடுவிக்கப்படுதுள்ள அரியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு நம்பகமின்மைத் தன்மை காணப்படுகின்றது.

இதை மாற்றியமைது அவர்களதும் அவர்களது குடும்பங்களதும் எதிர்காலம் தொடர்பில் நாம் உறுதியான நம்பிக்கை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்து முடிக்க அரசியல் அதிகாரங்கள் எமது கரங்களுக்கு வேண்டும்.

அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் பொதுஜன பொரமுன கட்சி சாபில் முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு மக்கள் எமது வழிமுறை நோக்கி அணிதிரண்டு வந்து கோட்டபாயவின் வெற்றியை நாம் உறுதிப்படுத்த முடியும்.


அவ்வாறு அவரது வெற்றியில் அது பங்க்ளிப்பும் இருக்குமானால் அதனூடாக நாம் ஆட்சிக்கு வந்தால் அந்த கைதிகளின் விடுதலையயை நிச்சயம் உறுதி செய்வோம். இதை நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:

வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !
எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் - இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்...