கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, October 31st, 2019


தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிக குறுகிய காலப் பகுதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ள நிலையில்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைச்சாத்திட்டுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு மன்ற கல்லூரியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 17 சிறுபான்மை கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைச்சாத்திட்டார்.  

இதன்பிரகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிய கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.

Related posts:


எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை: நடைமுறைக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை !
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...