கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு.

Saturday, October 19th, 2019

வறிய மக்களின் அவல வாழ்வு மாற்றம்பெற்று அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வியல் முறையில் வெற்றிகொள்ள வேண்டும் எனதே எமது நோக்கமாகும். அத்தகைய ஒரு உறுதிமிக்க சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே எமது ஒவ்வொரு செயற்பாடுகளும்
இருக்கின்றன. நாம் தேர்தலுக்காக எதனையும் கூறுவது கிடையாது. உங்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தீர்வுகண்டு தருவோம்.
அதற்கான வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளது.
நம்பிக்கையே வாழ்க்கை. எம்மை நம்புங்கள். எமக்கு உங்களின் அரசியல் பலத்தை தாருங்கள். நான் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுதருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாவந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மறவன்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த கிராமத்தை உருவாக்கியது நாம்தான். அந்தவகையில் இந்த கிராமத்தின் அபிவிருத்தி குறித்து எனக்கு அதிக அக்கறை உண்டு.

கோட்டபாயவின் வெற்றியில் தமிழ் மக்களின் அபிலைசைகளுக்கு தீர்வுகளைக் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுகும் எமக்கும் மிக நெருங்கிய புரிந்துணர்வு நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

இந்த புரிந்துணர்வு தான் கடந்த காலங்களில் நாம் எமது மக்கள் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கும் தேவைப்படுகளுக்கும் எம்மால் தீர்வுகளை பெற்ருக்கொடுக்க முடிந்திருந்தது.

நாம் எங்கள் மீதே நம்பிக்கை கொண்டவர்கள். எம்மால் மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அதனால்தான் நாம் எம்மை நம்புங்கள். செய்வோம். செய்விப்போம் என்று நம்பிக்கையுடன் உங்களுக்கு தொடர்ச்சியாக கூறிவருகின்றேன்.
நான் வாக்கு கேட்டு வருவது எனது வெற்றிக்காக அல்ல. அது உங்கள் ஒவ்வொருவரதும் வெற்றிக்கானதாகவே இருக்கும்.

அந்தவகையில் உங்கள் வெற்றியை உறுதிசெய்ய நீங்கள் இம்முறை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்‌ஷவின் வெற்றியை உறுதி செய்யுங்கள். நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:


இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...