கொழுந்துப்புலவு – மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைப்பு!

Thursday, February 29th, 2024

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழுந்துப்புலவு- மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு வீதிப் புனரமைப்பு திட்டத்தின் வீதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு,  வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  நிதிப்பங்களிப்புடன் இவ் புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாத வீதியானது இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலையீட்டால் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதி மழை காலங்களில் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகும் கிராமத்தில் வாழும் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மழை காலங்களில் மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

புனரமைப்பு பணிகள் ஆரம்பித்தவை தமக்கு பெரும் மகிழ்வாக இருப்பதாகவும் குறித்த கிராம மக்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...
வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா - ஆராய்ந்து அறிக்கை சமர்ப...
சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர்...