கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020

கொரோனா தெற்றுக்குள்ளான ஒருவர் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த நோய்த் தெற்றை எதிர்கொள்வதற்காக வைத்தியாசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த மதபோதகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்ப்பாண மக்களிடையே அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காகவும் அத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் பல்வேறு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்த நிலையிலேயே அமைச்சர் இன்று பிற்பகல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் துறைசார் வைத்திய அதிகாரிகளையும் ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகி்றவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - டக்ளஸ் எம்....
குற்றவாளிகளை பாதுகாக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!
நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் விஞ்ஞான முறைமையின் தேவை மிக அவசியம் – டக்ளஸ் எம்...