கொரோனா அச்சுறுத்தல்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவசர கலந்துரையாடல்!

Monday, October 26th, 2020

கொவிட் 19 எனப்படும் கொறேனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொள்வது தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

பேலியாகொட மீன் சந்தை உட்பட கடற்றொழில் சார் செயற்பாட்டு மையங்கள் பலவற்றில் கொறோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரினால் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய மீளாய்வுக் கலந்துரையாடலில், மேலதிக மீன்களை களஞ்சிப்படுத்துதல், கருவாடு பதனிடுதல் மற்றும் ரின் மீன் உற்பத்தி மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கான சாதக பாதகங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

.

Related posts: