அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க வவுனியா நகரெங்கும் பதாதைகள்!

Thursday, November 8th, 2018

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்கும் முகமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் வவுனியா நகரப் பகுதியெங்கும் பதாதைகள் கட்டி பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சியுடன் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதிய அரசில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

இதையடுத்து தமிழ் மக்களிடையே குறிப்பாக வடபகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளதுடன் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதிக்கான தனது பயணத்தை மேற்கொண்டு வவுனியா மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வவுனியா வருகையை அடுத்து அவரை வரவேற்கும் முகமாக கொட்டும் மழையிலும் வீதியெங்கும் அவரது அட்டைப்படங்களால் அலங்கரித்து மக்கள் காத்திருக்கின்றனர்.

மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த வரவேற்பு நிகழ்வு வவுனியா வரவேற்பு வளைவிலிருந்து ஆரம்பமாகும் குறித்த வரவேற்பு நிகழ்வு வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடி வரை சென்று அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா பிரதான பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

 viber image

viber image

0111

viber image00

0

 

Related posts: