கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Monday, July 15th, 2019

கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் ஆலய சுற்றுவீதி ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக மக்கள் கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகளை பெற்று வந்துள்ள போதும் தற்போது ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்களால் அவ்வாறான தேவைப்பாடுகளை பெற்றுக்கொள்ள இயலாது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என சுட்டிக்காட்டினர்.

மேலும் தமது ஆலயத்தை சூழவுள்ள வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படாதுள்ளமையால் ஆலய திருவிழா காலங்களில் பல்வேறு அசௌகரியங்களை பக்தர்கள் எதிர்கொண்டு வருவதுடன் நாளாந்தம் அவ்வீதியால் சென்று வரும் மக்களும் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் எமது மக்களது அத்தியாவசிய பிரச்சினைகளுக்கான குறித்த தீர்வை பெற்றுத் தருமாறும் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுத் தந்து தமது பிரதேச இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த நிர்வாகத்தினரது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை -  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி ...
கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு - "வின்ஞ்" பயன்படுத்த அமை...
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...