கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

கைவேலி புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அருள்மிகு ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழான கைவேலி 2ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள பிள்ளையார் ஆலயம் புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் (10) இடப்பெற்றது.
ஆலய நிர்வாகத்தினர் விடுத்திருந்த அழைப்பிற்கு இணங்க, அங்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருவறைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
முன்பதாக, சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, கருவறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கருவறைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து, அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, இந்நிகழ்வில் கலந்து கொள்வதானது, மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்குத் தமது பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவநாதன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராசா கிருபன் ஆகியோரும் உடனிருந்தனர்.
Related posts:
|
|