கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 21st, 2024

எமது சமூகம் கையேந்தாத சமூகமாக வெற்றியை  நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .அதனை நோக்கி வழிநடத்த தயாராக இருப்பதாகவும் மக்கள் அதனை உறுதிசெய்ய அணிதிரண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து பயனாளர்களுக்கு அரிசி பொதியை வழங்கிவைது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  அவர் மேலும் உரையாற்றுகையில் –

திட்டங்கள் எதுவானாலும் சரி அது வழங்கப்படும் போது .சரியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு தகுதியற்றவர்களை இனங்கண்டு  திட்டத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.

அதேபோன்றுதான் இந்த திட்டத்திலும் அவ்வாறு தவறான தெரிவுகள் இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை எட்ட முடியும்.

இதேநேரம் நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.

அதேநேரம், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அதாவது செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. ஆனால் அவர்கள் அந்த விசப்பரீட்சையில் தோற்ற முன்வரவில்லை.

இதனால் ரணில் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதேநேரம் தமி்ழ் பொது வேட்பாளர் விடயம் என்பது தமி்ழ் தரப்பினருக்கு தோல்வியான ஒன்றுதான். இது எவ்விதத்திலும் தமிழ் மக்களுக்கு நலனை பெற்றுத் தராது. அவ்வாறு தெரிந்தும் ஏன் தமிழ் தரப்புகள் இவ்வாறு பொது வேட்பாளர் வேண்டும் கூறி தமிழ் மக்களை தோல்வியை நோக்கி கொண்டு செல்கின்றார்கள் என்பது வேதனையானதாக இருக்கின்றது.

மாறாக தெற்கே தேர்தலில் போட்டியாளர்களாக இறங்கவிருக்கும் தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களுடன் பேரம்பேசி எமது மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தான் நகர்வுகள் அமையவேண்டும் ஆனால் தமிழ் தரப்பினர் அவ்வாறு முயற்சிக்கவில்லை. முயற்சிக்கவும் விரும்பவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம்.

நோய் ஒன்றை குணமாக்க வேண்டும் என்றால் கசப்பான மருந்தானாலும் அதை குடித்தே ஆகவேண்டும். அதுபோன்றுதான் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிபு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அரசியல் சூழல் என எல்லாம் அமைந்துள்ளது. அதற்கு நாமும் பங்களிப்பு செய்வது அவசியம்.

இதேநேரம் மக்கள் படும் துயரங்களுக்கு நானும் ஒரு காரணம் என்றுதான் எண்ணுகின்றேன். நானும் இந்த உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்த முக்கியமான ஆரம்ப போராளிகளில் ஒருவர் என்ற ரீதியில் அதற்கான தார்மீக பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத்தான வேண்டும்.

இதனால்தான் நான் தொடர்ந்தும் மக்களுடன் வாழ்ந்து வருகின்றேன். தீர்வுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என முடியுமானவரை தென்னிலங்கையிலு எனக்கள்ள தேசிய நல்லிணக்கத்தினூடாக போராடிக்கொண்டிருக்கின்றேன்.

எமுது இளைஞர்கள் எமது உரிமையை பெறுவதற்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் கடந்தகால தமிழ் அரசியல்வாதிகளானாலும் சரி ஆயுத வனமுறையாளர்களானாலும் சரி இருப்பதை பாதுகாக்கவும் இல்லை கிடைப்பதை சாதகமாக்கிக்கொள்ளவும் இல்லை. இதுவே வரலாறு.

அந்தவகையில் நாம் தொடர்ந்தும் கையேந்துவபர்களாக இருக்க கூடாது வெற்றியை நோக்கி செல்லவேண்டும் அதை நான் முன்னெடுக்க தயாராக இருக்கின்றேன். நீங்களும் என்பின்னே அணிதிரண்டால் அது நிச்சயம் நடந்தேறும்

அதனடிப்படையில் “வீரம் விலைபோகாது விவேகம் இருக்கும் வரையில்” என்பதற்கிணங்க மக்களாகிய உங்களது செயற்பாடுகள் இருப்பதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது்.

000

Related posts:


தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.- ஜப்பான் தூதுவரிம் அமைச்ச...