கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 13th, 2017

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கைப்பணி தொழில்துறை சார்ந்தோர் தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண்பதே சிறப்பானதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை பேணிப் பாதுகாப்பதிலும் அவற்றை முன்னேற்றுவதிலும் நாம் முழுமையான உதவிகளையும் வழங்கியிருந்தோம்.

அதே போன்று எதிர்காலங்களிலும் எமது மக்கள் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மூலம் உரிய பயன்களை பெற்றுக்கொள்வதற்கு முழுமையான பங்களிப்பையும் வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

கைப்பணித்துறை சார்ந்தவர்கள் உள்ளூர் வழங்களை பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் முகமாக தரமான படைப்புகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது.

இதனூடாகவே குறித்த தொழில்த்துறை சார்ந்தோர் அவர்களது தொழில்த்துறை மூலமாக பாரிய நன்மைகளையும் இலாபங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் எப்போதும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை பக்கபலமாகவும் நின்று தொழில்துறை சார்ந்தவர்களது வாழ்வியல் முன்னேற்றங்களுக்காக பாடுபட தயாராக இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இதனிடையே யாழ் மாவட்ட கைப்பணியாளர் அபிவிருத்தி சங்க மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கட்சி நிதியத்தினூடாக ஒரு மில்லியன் ரூபாவை கடந்தகாலத்தில் டக்ளஸ் தேவானந்தா  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (12) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்  போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மற்றும் குறித்த கைத்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

16735194_1319861594719591_1304853622_o

Related posts:

குடிநீர் வசதியைப் பெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் புதுமாத்தளன் மக்கள் கோரிக்கை.
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் டக...

நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் த...
சீநோர் நிறுவனத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!