கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் – புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 12th, 2020

கைகளினால் அள்ளித் தருவதை வாங்கி எடுங்கள். ஆனால் தேர்தல் தினத்தில் புள்ளிகளை சிந்தித்து இடுங்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

அரியாலை, உதயபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாக்காளர்களை கவருவதற்காக பல்வேறு தரப்பினரும் வருவார்கள். அவர்களில் சிலர் பல்வேறு பொருட்களையும் கைகளினால் அள்ளி வருகின்றார்கள். அவ்வாறானவர்கள் தருவதை முக மலர்ச்சியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆனால், தேர்தல் தினத்தில் சரியானவர்களை தெரிவு செய்து உங்கள் புள்ளடிகளை இடுவதன் மூலம் எதிர்காலத்தினை வளமாக்குவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அரியாலை, உதயபுரம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான கள்ள மண் ஏற்றப்படுதல் உட்பட பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அப்பகுதி மக்களுடன் விரிவாக கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: