கெளதாரிமுனையில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் நவீன இறால் பண்ணை – ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 30th, 2022


கெளதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில்  அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் ஒன்றிற்கு 300 தொன் இறால் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அதன்மூலம், வருடம் தோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று  மதிபீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், சமூக மேம்பாட்டு வசதிகளும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 30.09.2022

Related posts:

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்...
அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவ...